Wednesday, August 14, 2013

அன்று மட்டுமே படித்திடு உன் காதல் கவிதைகளை……

அன்று மட்டுமே படித்திடு உன் காதல் கவிதைகளை……

நிலா பெண்ணே!
வண்ண ஆடை
மேகமென உனை மூட
என்னுள் மோக மழை
பொழிந்தது என்றாய்…
சுட்டெறிக்கும் உன் சூரிய விழியால்
உருக பனியல்லவே என் இதயமும்!!
அன்பென்ற தங்கஇதயம் அல்லவா
மேலும் மின்னவே செய்கிறது..
புடத்தில் இட்டாற் போல்…
என்று மணியாய், முத்தாய்,
நவ ரத்தினமாய், வைரமாய்
தனித் தன்மையுடன் ஜொலிக்கிராயோ
அன்று மட்டுமே படித்திடு
உன் காதல் கவிதைகளை.......
என் தங்க இதயமும்
பெருமையுடன் ஏற்றுக் கொள்ளும்!!

  சிந்தனை பணியில்
சிந்தனை நந்தவனத்தில்

ராஜ ராஜேஸ்வரி _/\_

Saturday, August 10, 2013

தம்பதியர் பலவிதம் : சிறு கதை :1 அவள், ‘அவர்ர்ர்ர்’, அவன்…..

தம்பதியர் பலவிதம் : சிறு கதை :1

அவள், ‘அவர்ர்ர்ர்’, அவன்…..

ஜானுக்கு சுதா மேலே ஏகப்பட்ட கோவம். ...

அலுவலகத்தின் 6 வது மாடியிலிருந்து முழுதாக போடப் பட்ட பிரன்ச் கண்ணாடி வழியாக அமைதியாகவும் ‘ரொமாண்டிக்காவும் பெய்து கொண்டிருந்த மழை அவனது தற்போதைய மனைவி, அதாவது கடந்த கால காதலி சுதாவிற்க்கும் தனக்கும் இருந்த காதல் நினைவுகளை கிளப்பியது.

ஹூம்.. ‘ எவ்வளவு மாறி விட்டாள்’ என்று நொந்த படியே , முகனூலில் ஏதோ முகம் தெரியாத நண்பி(?) யுடன் உரையாடிக் கொண்டிருந்தவன் ….நேரத்தை பார்த்ததும் .. ‘ஐயோ.. இன்னைக்கும் கச்சேரி தான் ‘ என்று வேக வேகமாக வீட்டிற்க்கு புறப் பட்டான்.

சற்று தூரத்திலேயே பால் கனியில் ‘அவனுடன்’ கொஞ்சி கொண்டிருந்தாள் சுதா!.... பார்த்ததும் அவனுக்கு ஆத்திரமாகவும் சற்று இயலாமையாகவும் இருந்தது.
‘அவனை’ வீட்டிற்க்கு கொண்டு வந்ததில் தான் அவர்களுக்குள் இருந்த அந்யோநியமே கெட ஆரம்பித்தது. தனக்கு பிடிக்கவில்லை என்று எவ்வளவு சொல்லியும் வர வர எதிலுமே தன்னை மதிக்காமல் அவள் நடந்து கொள்வது அவனுக்கு பெரிய அவமானத்தையும் , வருத்தத்தையும் தந்தது. ஏதாவது பேசினாலே..

‘என்ன செய்ய?.... இரண்டு வருடம் ஆகியும் குழந்தை இல்லை ந்னு எல்லாரும் கேட்கறாங்க.. எனக்கும் தானே மனது கஷ்டமாக இருக்கு, நீங்க பாட்டுக்கு எப்பவும் ஆபிஸ் ஆபிஸ் ந்னு இருக்கீங்க … எனக்கும் ஒரு துணை வேணாமா?’ ந்னு சொல்லி என் வாயை அடக்கிடறா..

சனியன் பிடிச்சவ… நான் வரும் போதே இப்படி என்ன வெறுப்பேத்தினா… நான் மட்டும் என்ன செய்யறது… இன்னோருத்தனா இருந்தா வீட்டு பக்கமே வர மாட்டான் … என்று பல மாதிரி நினைத்து கொண்டே வந்தனுக்கு …

ஒரே ஆச்சர்யம்!.. என்றும் இல்லாத புன்னையுடன் .. ...

“என்னங்க… என் தோழி வந்திருக்கா… நானும் ரொம்ப நாளா உங்க கிட்டே கேட்டு கேட்டு அலுத்து போய்ட்டேன்.. நான் அவ கூட போய் எனக்கு பிடிச்ச ஜீன்ஸும், டி-ஷர்ட்டும் வாங்கிட்டு வந்துடறேன் … கொஞ்சம் கார்ட் கொடுங்க… உங்களுக்கு எல்லாம் டேபிள் லே எடுத்து வச்சுருக்கேன் … சாப்பிட்டுக்கோங்க.. நான் என் தோழி யோட வெளிலே சாப்பிட்டு வந்துடறேன்… எனக்காக காத்திருக்க வேண்டாம்… ‘
என்று சொல்லி விட்டு. கார்டை பிடுங்கி கொண்டு ஓடும் அவளை பார்த்தால் மேலும் அவனுக்கு இயலாமையாக இருந்தது…

ச்சே!! இவ ஜீன்ஸ் போட்டா எனக்கு பிடிக்கலை ந்னு எவ்வளவு சொல்லியும் …. என்ன ஒரு திமிரு இவளுக்கு.. காதலிக்கும் போது நீண்ட சடையும் சுரிதாரும் போட்டு மயக்கியவள் இப்ப எப்படியெல்லாம் ஆடறா .. ச்சே… என்று நொந்தவன் .. ‘வோட்கா’ பாட்டிலை திறந்தான்…

ஜின்ஸ்டுனும் டி ஷர்ட்ட்டுடனும் நுழைந்த அவளை கண்டும் காணாதது போல் கோப்பையும் ரிமோட்டுமாய் இருந்தான் .வெறுப்படைந்த சுதா தானும் அவனை காணாதது போல் ….நேரே ‘அவனை ‘ காண சென்றாள்.

கணவன் எதிரேயே .........அவனை கட்டியணைத்து, முத்தமாறி பொழிந்த படி… ……..‘ராஜா எப்படி இருக்கு சொல்லுடா சொல்லுடா என்று கேட்க…..

அப்ப கத்த ஆரம்பித்த ராஜா …
அடங்கவேயில்லை…
ஒரு வழியா போய் பழைய படி சுரிதாரை மாத்தி வந்த வுடனே தான் பழைய படி ராஜா … …….
வாலை குழத்தபடி அவளை நக்கி நக்கி தன் அன்பை வெளிப் படுத்தினான்…..
இதை பார்த்து கொண்டிருந்த ஜான் சந்தோஷம் பீறிட…. ..
“ராஜா… இனி நீயும் எனக்கு நண்பனே”…. என்று முதன் முறையாக ‘அவனை’ கட்டி பிடித்தான்.
‘அவன்’ வரவால் அவர்களுக்குள் இருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது….
பிறகென்ன எல்லாம் சுப ராத்திரி தான்!!!

உன்னுள் அன்பை நிரப்ப வேறு எங்கு கை ஏந்தி கொண்டிருக்கிறாய்?......



உன்னுள் அன்பை நிரப்ப

வேறு எங்கு

கை ஏந்தி கொண்டிருக்கிறாய்?...


பாலில் புதைந்திருக்கும் நெய்யையும்.
பூக்களிலுள்ள தேனையும்
விறகினில் உள்ள  எரிசக்தியையும்
அனுபவிக்கும் மனிதனே!

கைக் கெட்டும் தூரத்தில் இருக்கும்
அணைத்திலும் உறைந்திருக்கும்
பிரம்பஞ்சத்தின் அன்பை மட்டும்
ஏன் மனிதனிடம் மட்டுமே தேடுகிறாய்?

"சட்டியில் இருந்தால் தானே
அகப்பையில் வரும்?"
இயற்கை என்ற
அட்சய பாத்திரம் இருக்க

உன்னுள் அன்பை நிரப்ப
வேறு எங்கு
கை ஏந்தி கொண்டிருக்கிறாய்?

சிந்தனை பணியில்
சிந்தனை நந்தவனத்தில்

ராஜ ராஜேஸ்வரி _/\_

Thursday, August 8, 2013

நான் அவர்களை ‘மிருகம் என்று சொல்ல மாட்டேன்.. ஏனென்றால்,……



நான் அவர்களை ‘மிருகம் என்று சொல்ல மாட்டேன்.. ஏனென்றால்,……

தாயன்பு கிடைக்க பெறாதவர்களுக்கு, ஒன்று, பெரும்பாலும் ஏதோ ஒரு தியாகம் மற்றவருக்காகவோ', அல்லது சமுதாயத்துக்காகவோ செய்ய வேண்டிய அவசியம் ஆழ் மனிதில் ஏற் படுகிறது. இதை சரியாக உபயோகப் படுத்திக் கொண்டவர்கள் ஆக்க பூர்வமான செயல்கள் செய்து நல்ல பெயர் எடுக்கிறார்கள். உணர்வுகளுக்கு அடிமையானவர்கள் 'தியாகம்' என்ற பெயரில் சர்ச்சையான உறவுகளில் சிக்கி வேதனை படுகிறார்கள்.
எதிர் மறையாக , அன்பை 'மறுத்தவர்கள்' [அதாவது மிக ஆழ்ந்த துன்பம் தரக் கூடிய உணர்வுகளையும், எண்ணங்களையும் சிலர் ஆழ் மனதில் புதைத்து விடுவர் .. இதற்கு உளவியலில் ரிப்ரஷன்' என்று சொல்வர்.  (இணையான தமிழ் வார்த்தை தெரியவில்லை)] பல மன பிறழ்வு மற்றும் மன நோய்களுக்கு ஆளாகி சமுதாயத்தையும் மற்ற வரையும் துன்புறுத்துவதிலும் , அதில் குற்ற உணர்வு இல்லாதவராகவும் ஆகி , நாள் போக்கில் மனித தன்மையே இழந்து வீணாகி விடுகின்றனர் . நான் அவர்களை ‘மிருகம் என்று சொல்ல மாட்டேன்.. ஏனென்றால், மிருகங்கள் உலகத்தில் ‘விதிகள்’ வேறு. ‘அந்த விதிகளுக்கு’ உட்ப் பட்டு தான் அவைகளும் வாழ்கின்றன.
தீர்வு:  நல்ல மனிதர்கள் உருவாக தாயன்பு இன்றியமையாதது. இதற்கு நல்ல தரமான நேரம் மட்டுமல்ல, அதிகமான நேரமும் தேவைப் படுகிறது.
பொருளாதார சிக்கல் உள்ளவர்கள் தாயாவதற்க்கு முன் யோசியுங்கள்.
கருத்து ஆக்கம்: உளவியல் அறிவு , உளவியல் பயிற்சி, மற்றவர்களின் வாழ்க்கையின் வாயிலாக புரிந்து கொண்டது, மற்றும் சொந்த அனுபவம்.


சிந்தனை பணியில்
சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி!  _/\_



Thursday, July 25, 2013

தடை கற்களையே கொண்டு நீங்கள் ஒரு புது வெற்றி பாதையை உருவாக்கலாம்…



தடை கற்களையே கொண்டு நீங்கள் ஒரு புது வெற்றி பாதையை உருவாக்கலாம்…

 நீங்கள் மிக பெரிய வெற்றியாக நினைப்பதை உங்கள் வாழ்க்கையில் அடைய:
 
1.   சரியான மற்றும் பிடித்த திசை,
2.   என்ன வேண்டுமென்பதில் தெளிவான, நன் நோக்கம்,
3.   தொலை நோக்கு பார்வை
4.   தீவிரமான இலக்கு
5.   நேர்மையான முயற்சி,
6.   திறமையான செயலாக்கம்,
7.   உங்கள் வெற்றியை ஊக்குவிக்கும்/விழையும் நெருங்கிய உறவு
8.   ஏமாற்றங்களை எதிர் கொள்ளும் உள்ள திண்மை
9.   எப்போதும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும், கற்கும் ஆற்றலுடன் இருப்பது
10.  நேரத்தை பணம் போல் பாவித்து சரியாக முதலீடு மற்றும் செலவழிப்பது
முக்கியமாக இவை இருந்தால்,
தடை கற்களையே கொண்டு நீங்கள் ஒரு புது வெற்றி பாதையை உருவாக்கலாம்!
சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி

Wednesday, July 24, 2013

நான் ஒரு ‘நவீன வாதி’! அப்படியிருப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது!!



நான் ஒரு ‘நவீன வாதி’! அப்படியிருப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது!!
மாற்றம் காலத்தின் கோலம்.
நம்மை சுற்றி பலவும் மாறி கொண்டே இருக்கின்றன.
இந்த மாற்றத்தை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், பாரம்பரிய கலாசரத்தை பரிசீலனை ஏதுமின்றி, அந்தந்த கால கட்டத்திற்கேற்றார்ப் போல் நடை முறை வாழ்க்கைக்கு ஒவ்வாதிருந்தாலும், அவஸ்தைகுள்ளானாலும், மாறாது இருப்பர் சிலர்.
இவர்கள் பழமை வாதி எனப் படுவர்.
பல நாட்டு கலாசாரங்களும் ஊடுருவிய இன்றைய காலக் கட்டத்தில், அதற்கேற்றார்ப் போல் சிலர் தமக்கு பிடித்தவற்றை பின் பற்றி தமது வாழ்க்கை முறையை மாற்றி கொள்வர்.
 இதனால் இவர்கள் ‘நெறி தவறியவர்’ என்றோ கலாச்சார சீரழிவுக்கு வழி கோலுபவர் என்றோ சொல்ல முடியாது. இவர்கள் ‘கலாச் சார மாற்றாளர்கள்’ அல்லது ‘நவீன வாதிகள் என்று சொல்லலாம்.
சிலர் நவீனம் என்ற பெயரில் அன்பு, பண்பு மறந்து, தனி மனித ஒழுக்கமின்மை, அதாவது, சுய நலம், பேராசை, பொறாமை, சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல் போன்றவற்றை செய்வர் . இவர்களே கலாசார மற்றவர்.
மக்களே! இது ஆண் பெண் அணைவருக்கும் பொருந்தும் . சிலர் ‘நவீன வாதி’ யாக இருப்பது  ஆண்களுக்கு மட்டுமே ஆன தனி உரிமை என்று நினைக்கிறார்கள்.
நான் ஒரு ‘நவீன வாதி’. அப்படியிருப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
வெறி தவிர்ப்போம்; நெறி வளர்ப்போம்!!

சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி!  _/\_