நான் அவர்களை ‘மிருகம்
என்று சொல்ல மாட்டேன்.. ஏனென்றால்,……
தாயன்பு கிடைக்க
பெறாதவர்களுக்கு, ஒன்று, பெரும்பாலும் ஏதோ ஒரு தியாகம் மற்றவருக்காகவோ', அல்லது சமுதாயத்துக்காகவோ
செய்ய வேண்டிய அவசியம் ஆழ் மனிதில் ஏற் படுகிறது. இதை சரியாக உபயோகப் படுத்திக் கொண்டவர்கள்
ஆக்க பூர்வமான செயல்கள் செய்து நல்ல பெயர் எடுக்கிறார்கள். உணர்வுகளுக்கு அடிமையானவர்கள்
'தியாகம்' என்ற பெயரில் சர்ச்சையான உறவுகளில் சிக்கி வேதனை படுகிறார்கள்.
எதிர் மறையாக
, அன்பை 'மறுத்தவர்கள்' [அதாவது மிக ஆழ்ந்த துன்பம் தரக் கூடிய உணர்வுகளையும், எண்ணங்களையும்
சிலர் ஆழ் மனதில் புதைத்து விடுவர் .. இதற்கு உளவியலில் ரிப்ரஷன்' என்று சொல்வர். (இணையான தமிழ் வார்த்தை தெரியவில்லை)] பல மன பிறழ்வு
மற்றும் மன நோய்களுக்கு ஆளாகி சமுதாயத்தையும் மற்ற வரையும் துன்புறுத்துவதிலும் , அதில்
குற்ற உணர்வு இல்லாதவராகவும் ஆகி , நாள் போக்கில் மனித தன்மையே இழந்து வீணாகி விடுகின்றனர்
. நான் அவர்களை ‘மிருகம் என்று சொல்ல மாட்டேன்.. ஏனென்றால், மிருகங்கள் உலகத்தில் ‘விதிகள்’
வேறு. ‘அந்த விதிகளுக்கு’ உட்ப் பட்டு தான் அவைகளும் வாழ்கின்றன.
தீர்வு: நல்ல மனிதர்கள் உருவாக தாயன்பு இன்றியமையாதது. இதற்கு
நல்ல தரமான நேரம் மட்டுமல்ல, அதிகமான நேரமும் தேவைப் படுகிறது.
பொருளாதார சிக்கல்
உள்ளவர்கள் தாயாவதற்க்கு முன் யோசியுங்கள்.
கருத்து ஆக்கம்:
உளவியல் அறிவு , உளவியல் பயிற்சி, மற்றவர்களின் வாழ்க்கையின் வாயிலாக புரிந்து கொண்டது,
மற்றும் சொந்த அனுபவம்.
சிந்தனை நந்தவனத்தில்
ராஜ
ராஜேஸ்வரி!
_/\_
No comments:
Post a Comment