Thursday, July 25, 2013

தடை கற்களையே கொண்டு நீங்கள் ஒரு புது வெற்றி பாதையை உருவாக்கலாம்…



தடை கற்களையே கொண்டு நீங்கள் ஒரு புது வெற்றி பாதையை உருவாக்கலாம்…

 நீங்கள் மிக பெரிய வெற்றியாக நினைப்பதை உங்கள் வாழ்க்கையில் அடைய:
 
1.   சரியான மற்றும் பிடித்த திசை,
2.   என்ன வேண்டுமென்பதில் தெளிவான, நன் நோக்கம்,
3.   தொலை நோக்கு பார்வை
4.   தீவிரமான இலக்கு
5.   நேர்மையான முயற்சி,
6.   திறமையான செயலாக்கம்,
7.   உங்கள் வெற்றியை ஊக்குவிக்கும்/விழையும் நெருங்கிய உறவு
8.   ஏமாற்றங்களை எதிர் கொள்ளும் உள்ள திண்மை
9.   எப்போதும் உற்சாகத்துடனும், நம்பிக்கையுடனும், கற்கும் ஆற்றலுடன் இருப்பது
10.  நேரத்தை பணம் போல் பாவித்து சரியாக முதலீடு மற்றும் செலவழிப்பது
முக்கியமாக இவை இருந்தால்,
தடை கற்களையே கொண்டு நீங்கள் ஒரு புது வெற்றி பாதையை உருவாக்கலாம்!
சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி

Wednesday, July 24, 2013

நான் ஒரு ‘நவீன வாதி’! அப்படியிருப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது!!



நான் ஒரு ‘நவீன வாதி’! அப்படியிருப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது!!
மாற்றம் காலத்தின் கோலம்.
நம்மை சுற்றி பலவும் மாறி கொண்டே இருக்கின்றன.
இந்த மாற்றத்தை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், பாரம்பரிய கலாசரத்தை பரிசீலனை ஏதுமின்றி, அந்தந்த கால கட்டத்திற்கேற்றார்ப் போல் நடை முறை வாழ்க்கைக்கு ஒவ்வாதிருந்தாலும், அவஸ்தைகுள்ளானாலும், மாறாது இருப்பர் சிலர்.
இவர்கள் பழமை வாதி எனப் படுவர்.
பல நாட்டு கலாசாரங்களும் ஊடுருவிய இன்றைய காலக் கட்டத்தில், அதற்கேற்றார்ப் போல் சிலர் தமக்கு பிடித்தவற்றை பின் பற்றி தமது வாழ்க்கை முறையை மாற்றி கொள்வர்.
 இதனால் இவர்கள் ‘நெறி தவறியவர்’ என்றோ கலாச்சார சீரழிவுக்கு வழி கோலுபவர் என்றோ சொல்ல முடியாது. இவர்கள் ‘கலாச் சார மாற்றாளர்கள்’ அல்லது ‘நவீன வாதிகள் என்று சொல்லலாம்.
சிலர் நவீனம் என்ற பெயரில் அன்பு, பண்பு மறந்து, தனி மனித ஒழுக்கமின்மை, அதாவது, சுய நலம், பேராசை, பொறாமை, சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், ஏமாற்றுதல் போன்றவற்றை செய்வர் . இவர்களே கலாசார மற்றவர்.
மக்களே! இது ஆண் பெண் அணைவருக்கும் பொருந்தும் . சிலர் ‘நவீன வாதி’ யாக இருப்பது  ஆண்களுக்கு மட்டுமே ஆன தனி உரிமை என்று நினைக்கிறார்கள்.
நான் ஒரு ‘நவீன வாதி’. அப்படியிருப்பதில் எனக்கு பெருமையாக இருக்கிறது.
வெறி தவிர்ப்போம்; நெறி வளர்ப்போம்!!

சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி!  _/\_


Saturday, July 13, 2013

மனிதனே! விலங்கிடமிருந்து கற்று கொள்!!!



மனிதனே! விலங்கிடமிருந்து கற்று கொள்!!!

மென்னையான மணற் பரப்பும்
அடர்ந்த காட்டின் நடுவே
ஊற்றெடுக்கும் கிணறும்
பிறகு பூக்களும், கனிகளும்
நிலமும் மேகமும் தான்
மேலும் போதையூட்டினாலும்
ரசித்து , ருசித்து மட்டுமே செல்கின்றன
வண்ணத்து பூச்சியும், ‘கொடியன’
என நாம் சொல்லும் மிருகங்களும்!!
வெறி தவிர்ப்போம்; நெறி வளர்ப்போம்!!
சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி!

Thursday, July 11, 2013

இருத்தலின் ஆனந்தம்!

பெறுதல் ,செய்தல், இவற்றில் முதல் நோக்கமில்லாது , வெறும் இருத்தலில் உருவாகும் காதல் அனுபவம்.. ..

இயற்கையில் இருந்து, ரசித்தவருக்கு இயல்பாக வரும்.

அதனால் தான் உண்மையான காதல் கொண்ட அணைவரும் இயற்கையை பாட ஆரம்பித்து விடுகிறார்கள்...

இயற்கை மேல் காதல் வயப்பட்டு

சிந்தனையுடன்
சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி

இது அறிவது அல்ல.. புரிவது அல்ல... உணர்வதும் அல்ல... புலப் படுவது!!!

'இயற்கையில் இருத்தல்',
இயற்கையின் தன்மையை நம்முள் உணர்தல் ,
பின் இயற்கையுடனே ஐக்கியமாதல்,
இவற்றை படிப் படியாக பழகாத வரை

'கிருஷண மாrக்கம்'.. ஒரு புரியாத புதிரே!

இது அறிவது அல்ல..
புரிவது அல்ல...
உணர்வதும் அல்ல

புலப் படுவது!!!


சிந்தனை நந்த வனத்தில் 
ராஜ ராஜேஸ்வரி

Monday, July 8, 2013

‘கண்ணியம் மற்றும் கற்பு பிரச்சனை இங்கும் பெண்களுக்கு மட்டுமே!



‘கண்ணியம் மற்றும் கற்பு பிரச்சனை
இங்கும் பெண்களுக்கு மட்டுமே!


இணையத்தில்
இணைந்த
இனிய
காதலே!
பகலெல்லாம் பேசி
இரவெல்லாம் உருகி
கற்பனையில் காவியம் பாடி
கரைந்தோடும் நேரங்களில்
உன் குரலோ கேளாது
உருவமோ பாராது
வெட்டியும்
ஒட்டியும்
உறவாடி
நீ அடிக்கும்
லூட்டிகள்
பல என்றாலும்
தெய்வீக காதலாக
‘இருத்தலை’
மட்டுமே
உணர்த்துவதாக
இருந்தாலும்,
‘இருந்தும் இல்லாத’
உறவுகளால் ஏற்படுகிற
வலியை ஒரு புறம் குறைத்தாலும்
மேலும் எழுப்புகிறது
‘கண்ணியம் மற்றும் கற்பு பிரச்சனை
இங்கும்
பெண்களுக்கு

மட்டுமே!
சிந்தனை பணியில்!
ராஜ ராஜேஸ்வரி

ஆண்களே! உங்களுக்குன்னா இரத்தம் .. பெண்களுக்கென்றால் தக்காளி சட்னியா?






ஆண்களே! உங்களுக்குன்னா இரத்தம் .. பெண்களுக்கென்றால் தக்காளி சட்னியா?


ஒரு இளவரசன் என்ற ஆண் மகனுக்காக எழும் இந்த எழுச்சி
ஏன் இது போல் தினமும்,
இளவரசன் சாதியை சேர்ந்த பல ஆண்கள் ,
ஆசை காதலனாக பழகி புள்ளயை கொடுத்து பின் பெண்களை கதற கதற கை கழுவுவதையும்,
கட்டிய மனைவியை உதறிவிட்டு , வெளிப் படையாக “வேறொரு பெண்ணுடன் தான் வாழ்வேன்” என்று கூறி செல்வதை
தினமும்  டிவி யில் வெளிச்சம் போட்டு காட்டியும்
மீடியாக்கள் பணம் சம்பாதிப்பதும் ,
உங்களை போன்ற மக்களுக்கு வெறும் பொழுது போக்காக போனதையும் தவிர
கதறி அழும் பெண்களுக்காக 

 ஏன் கொதித்து எழவில்லை இந்த ‘ஆணாத்திக்க’ சமுதாயம்?

உயர்ந்த சாதியில்  அல்லது மிக்க படித்த  அல்லது பணம் பெற்ற ஆண்கள்
ஏன்
ஏழை பெண்களை , வீட்டு வேலை செய்யும் ,அல்லது அவ்வளவாக அழகற்ற பெண்களை காதலிப்பதில்லை.?

ஆண்களே! உங்களுக்குன்னா இரத்தம் .. பெண்களுக்கென்றால் தக்காளி சட்னியா?

ஆக மொத்தம் ஒரு பெண்ணை குற்றப்படுத்த ஒன்று சேறும் இந்த இரட்டை வேட தமிழ் சமுதாயத்தில், 

பெண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள்…..
‘காதலை’ கண்டு பயந்தே ஆக வேண்டும்.
பாவையருக்கு திண்ணம் கொடுக்க மலர்ந்த இந்த எண்ண பூவை
ஆண்டவனுக்கே அற்பணித்து ,

தங்கள் பார்வைக்கு வைக்கிறேன்!


சிந்தனை நந்தவனத்தில்
ராஜ ராஜேஸ்வரி!