வலிய காதல் வருடும் தன் துணையை மட்டும் !
வரலாறு தேடாது !!
அளவு மக்காஸ் அளவு!
அளவற்ற காதலுக்கு
அளவு தெரியும்
ஆர்பரிக்காது
ஆட்டம் போடாது
அட்டகாசம் செய்யாது
‘அட்டென்ஷன் தேடாது
ஆழம் காணா
ஆழ் கிணறு காதலெல்லாம்
உண்மையில் கானல் நீரே!
‘அன்பு’ என்ற ஊற்றில்லா மாயையே
காதல் மேல் கொணட காதலே !
வலிய காதல்
வருடும் தன் துணையை மட்டும்
வரலாறு தேடாது
சிந்தனை பணியில்
ராஜ ராஜேஸ்வரி
No comments:
Post a Comment