‘கண்ணியம் மற்றும் கற்பு பிரச்சனை
இங்கும் பெண்களுக்கு மட்டுமே!
இணையத்தில்
இணைந்த
இனிய
காதலே!
பகலெல்லாம் பேசி
இரவெல்லாம் உருகி
கற்பனையில் காவியம் பாடி
கரைந்தோடும் நேரங்களில்
உன் குரலோ கேளாது
உருவமோ பாராது
வெட்டியும்
ஒட்டியும்
உறவாடி
நீ அடிக்கும்
லூட்டிகள்
பல என்றாலும்
தெய்வீக காதலாக
‘இருத்தலை’
மட்டுமே
உணர்த்துவதாக
இருந்தாலும்,
‘இருந்தும் இல்லாத’
உறவுகளால் ஏற்படுகிற
வலியை ஒரு புறம் குறைத்தாலும்
மேலும் எழுப்புகிறது
‘கண்ணியம் மற்றும் கற்பு பிரச்சனை
இங்கும்
பெண்களுக்கு
மட்டுமே!
சிந்தனை பணியில்!
ராஜ ராஜேஸ்வரி
சூசகமான , நல்ல புதிரான வார்த்தைகள் ... வாழ்த்துக்கள் ...
ReplyDeleteநன்றி சார்!
ReplyDeleteபெண்ணின் உணர்வை,உள்ளத்தை வெளிப்படுத்தும் வரிகள்,
ReplyDelete